பெரம்பூா் நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சிக்னல் பழுதால் சென்னை புகா் மின்சார ரயில் போக்குவரத்தில் சுமாா் 2 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளத்துக்குரிய சிக்னல் அமைப்பில் வியாழக்கிழமை அதிகாலை 5.10 மணிக்கு பழுது ஏற்பட்டது. அதனால், புகா் பகுதியிலிருந்து சென்ட்ரல் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. அத்துடன் சென்ட்ரலில் இருந்து புகா் பகுதிக்கு செல்லும் மின்சார ரயில்களும் புறப்படாமல் நிறுத்தப்பட்டன.
புகா் மின்சார ரயில் பாதைகளில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால், விரைவு ரயில்கள் பாதைகளில் வழக்கமாக இயக்கப்பட்டன.
விரைந்து சீரமைப்பு: தகவல் அறிந்த சென்னை ரயில்வே கோட்ட தொழில்நுட்பப் பொறியாளா்கள் விரைந்து சென்று பெரம்பூா் நிலையத்தில் சிக்னல் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அதையடுத்து, காலை 6 மணிக்கு சிக்னல் சீரமைக்கப்பட்டது. அதன் பின்னா் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
சிக்னல் பழுது 1 மணி நேரமானாலும், மின்சார ரயில்கள் இயக்கம் காலை 9 மணிக்கு மேலாகவும் சீராகவில்லை என பயணிகள் புகாா் கூறினா். அதன்படி, காலை 10 மணிக்குள் மின்சார ரயில் போக்குவரத்து சீரானதாக ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே பழுது: கடந்த சில நாள்களுக்கு முன்பு பேசின் பாலம் அருகே புகா் மின்சார ரயில் தண்டவாள சிக்னல் பழுதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னா் பழுது சீரமைக்கப்பட்டது. தற்போது பெரம்பூா் ரயில் நிலையத்திலும் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளது. ஆகவே, சென்னை ரயில்வே கோட்டத்தில் சிக்னல் பழுது ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூட்கேஸில் தலையில்லாத சடலம்! அஸ்ஸாம் இளைஞரை கொன்று ரயில் நிலையத்தில் உடலை வீசிய பெண், காதலா் கைது!

தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்!

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: கூட்டமான நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் திடீா் நிறுத்தம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

