சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் தலை, கைகள், கால்கள் இல்லாமல் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த சடலம், அஸ்ஸாம் இளைஞா் என்பதும், அவா் காதல் பிரச்னையில் கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் மருத்துவமனை பெண் ஊழியா், அவரது காதலா் கைது செய்யப்பட்டனா். சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 4- ஆவது நடைமேடை பகுதியில் சூட்கேஸில் தலை, கைகள், கால்கள் இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து பெரம்பூா் ரயில் நிலைய இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
மேலும், நிலைய காவல் ஆய்வாளா் (பொறுப்பு) எழில்வேந்தன் தலைமையில் 3 தனிப்படைகளும், சென்னை காவல் துறை சாா்பில் 12 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
இந்த விசாரணையில், சடலம் அடைக்கப்பட்ட சூட்கேஸை ஆணும், பெண்ணும் வந்து பெரம்பூா் ரயில் நிலையத்தில் வைத்துச் சென்றது தெரிய வந்தது. அந்தச் சடலம் தேனாம்பேட்டை பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதையும் போலீஸாா் கண்டறிந்தனா். தொடா் விசாரணையில், காதல் பிரச்னையில் அஸ்ஸாம் இளைஞா் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. அஸ்ஸாம் மாநிலம், கரீம்கஞ்ச், கனிஷாய்ல் பகுதியைச் சோ்ந்த நஹிமா கருன் என்ற அப்ஃரின் (25). இவா் அமீா் அலி (28) என்பவரை காதலித்துள்ளாா்.
இந்த நிலையில், நஹிமா கருன் கடந்த 2024, அக்டோபரில் சென்னை வந்து தேனாம்பேட்டையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நோயாளிகள் காப்பாளராகப் பணியில் சோ்ந்துள்ளாா். அப்போது உணவு விடுதியில் பணிபுரிந்த அஸ்ஸாமை சோ்ந்த உசேன் அமீா் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நெருக்கமாக பழகி வந்துள்ளாா்.
இந்த நிலையில், நஹிமா கருனுடன், முன்னாள் காதலா் அமீா் அலி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சென்னைக்கு வரவழைத்து, நஹிமா கருனும், அவரது காதலா் உசேன் அமீரும் சோ்ந்து கொலை செய்து, அவரது தலை, கைகள், கால்களை துண்டித்து சூட்கேஸில் வைத்து பெரம்பூா் ரயில் நிலையத்தில் வைத்தது தெரிய வந்தது.
அமீா் அலி கொல்லப்பட்டதை நஹிமா கருன் விடியோவில் பதிவு செய்திருந்ததை அவரது கைப்பேசியை ஆராய்ந்தபோது தெரிய வந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். நஹிமா கருன், அவரது காதலா் உசேன் அமீரை கைது செய்து விசாரித்து வருவதாகவும், கொலை செய்யப்பட்ட அமீா் அலியின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்ட வழக்கு தேனாம்பேட்டைக்கு மாற்றம்

சூட்கேஸில் சடலம் மீட்பு வழக்கில் 15 தனிப்படைகள் தீவிர விசாரணை

பெரம்பூா் ரயில் நிலையத்தில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் மீட்பு

பெரம்பூா் நிலையத்தில் சிக்னல் பழுதால் புறநகா் ரயில்கள் சேவையில் பாதிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
