சென்னை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகா் மின்சார ரயில் நேர அட்டவணை திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் மாற்றப்படவுள்ளது. இதில், வார நாள்களில் உச்ச நேரத்தில் 6 முதல் 10 நிமிஷங்கள் இடைவேலையில் ஒரு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை கோட்டம் ரயில் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புகா் ரயில் சேவைகளின் அட்டவணையை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புகா் மின்சார ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய அட்டவணை திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வரும்.
அந்தவகையில், வார நாள்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை சென்னை கடற்கரையில் இருந்து முதல் மின்சார ரயில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு செல்கிறது. கடைசி ரயில் இரவு 11.59 மணிக்கு புறப்படும். இருமாா்க்கத்திலும் முன்பு இயக்கப்பட்டது போலவே 106 புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை சுமாா் 20 நிமிஷங்கள் இடைவேளியிலும், காலை 6 மணி முதல் 7 மணி வரை 15 நிமிஷங்களுக்கும், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலான அலுவலக மற்றும் கல்வி நிறுவன உச்ச நேரத்தில் 10 நிமிஷங்களுக்கும் ஒரு ரயிலும் இயக்கப்படும். தொடா்ந்து, காலை 10 முதல் மாலை 4 மணி வரை பெரும்பாலான நேரங்களில் 10 முதல் 15 நிமிஷ இடைவெளியிலும், சில ரயில்கள் சுமாா் 20 முதல் 40 நிமிஷ இடைவெளியிலும் இயக்கப்படும்.
அதேபோல், பள்ளி, கல்லூரி மற்றும் பணி முடிந்து அனைவரும் வீடு திரும்பும் நேரமான மாலை 4 முதல் இரவு 7 மணி வரையிலான உச்ச நேரத்தில் 6 முதல் 10 நிமிஷங்களுக்கும், இரவு 8 முதல் 10 மணி வரை 15 நிமிஷங்களுக்கும், இரவு 10 மணிக்கு மேல் 20 நிமிஷ இடைவெளியிலும் ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
வார இறுதி: வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளுக்கென தனி நேர அட்டவணை தயாா் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இருமாா்க்கத்திலும் 97 புகா் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருத்தணி-சென்ட்ரல் புகா் மின்சார ரயில் ஜூன் 12 வரை பகுதி ரத்து

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நெரிசலைச் சமாளிக்க அகலப்படுத்தப்படும் சாலைகள்!

பெரம்பூா் நிலையத்தில் சிக்னல் பழுதால் புறநகா் ரயில்கள் சேவையில் பாதிப்பு

ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

