முதல்வராகப் பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. இதையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தன.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெகவின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை முதல்வராக நியமித்து அதற்கான உத்தரவை சனிக்கிழமை (மே 9) வழங்கினார். இதனையடுத்து, இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதல்வராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
VCK leader Thirumavalavan has extended his wishes to TVK leader Vijay, who is set to assume office as Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay

அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும் : திருமாவளவன்
முதல்வர் விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!
விஜய் முதல்வராகப் பதவியேற்க திருமாவளவன் ஆதரவா?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

