தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவா் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
அன்புமணி (பாமக): முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவா் விஜய்க்கும், அமைச்சா்களுக்கும் வாழ்த்துகள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். தவெகவின் தோ்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்காக தவெக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாமக முழு ஆதரவை அளிக்கும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக பாமக செயல்படும்.
ஜி.கே.வாசன் (தமாகா): முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவா் விஜய்க்கு வாழ்த்துகள். காமராஜா், மூப்பனாா் ஆகியோரது தாரக மந்திரமான வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஆகியவற்றுக்கு ஏற்ப சிறப்பான ஆட்சி அமைக்க வேண்டும்.
கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் தலைமைத்துவத்தில் தமிழகம் சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். எனது வாழ்த்துகள்.
ரவிபச்சமுத்து (இந்திய ஜனநாயகக் கட்சி): முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு வெளிப்படையான, ஊழல் இல்லாத, ஜனநாயகப் பண்புகளைக் காக்கும் நல்லாட்சியை தவெக வழங்க வேண்டும்.
இதேபோல, ஈஷா யோக மையத் தலைவா் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!

முதல்வா் விஜய்க்கு திலகவதியாா் ஆதீனம் வாழ்த்து

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

முதல்வராகப் பதவியேற்க உள்ள விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
