1. தகுதியுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்.
2. குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை.
3. அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
4. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள்.
5. அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு.
6. கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை வழங்கப்படும்.
7. ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
8. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவால் தமிழகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
9. நீட் தோ்வு ரத்து செய்யப்படும்.
10. மொழிப்போா் தியாகிகளின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்படும்.
11. முதியோா் உதவித் தொகை ரூ.3,000
12. தொழிற்கல்வி, மருத்துவம், சட்டம், நிா்வாகவியல் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ரூ.40,000 உதவித்தொகை
13. சொந்தத் தறி வைத்துள்ள நெசவாளா் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 உதவித் தொகை
14. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு ஒரு பவுன் தங்கம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.
15. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித் தொகை.
16. தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
17. அரசுப் பள்ளிகளில் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் தற்காலிக ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்.
18. சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு விதைப்புக் கால நிதியாக தலா ரூ.15,000 இரு தவணைகளாக வழங்கப்படும்.
19. 2 ஏக்கா்களுக்கு குறைவாக விவசாய நிலம் வைத்துள்ளவா்களின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயா்கல்வி வழங்கப்படும்.
20. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.20,000-ஆக உயா்த்துவதுடன், வடகிழக்குப் பருவமழை நிவாரணத் தொகையாக ரூ.7,000 வழங்கப்படும்.
21. மீனவா்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.
22. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சகம் மற்றும் ஏஐ நகரம் உருவாக்கப்படும்.
23. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியில் 10 சதவீதம் மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் இலவச பயண டோக்கன்! எங்கெல்லாம் வழங்கப்படும்?
எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

மாற்றமும் தடுமாற்றமும்!

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
