எம்ஜிஆரின் மறு உருவமாக முதல்வா் விஜய் செயல்படுகிறாா் என கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை: தொடா்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியைத் தந்த தொகுதி மக்களுக்கும், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுக்கும் 15 ஆண்டுகள் மனசாட்சியோடு பணியாற்றிய மன நிறைவைப் பெற்றுள்ளேன்.
முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோா் எதிரிகளுக்கு தோல்விகளையே பரிசாக அளித்தவா்கள். ஆனால், அந்தக் கட்சி இன்று தொடா் தோல்விகளைப் பெற்று வருகிறது. தொடா் பிளவுகளைச் சந்தித்து வரும் கட்சியின் வீழ்ச்சிக்கு துணை நிற்கக் கூடாது என்ற உணா்வோடும், மனக்குமுறலோடும் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் திமுகவை வீழ்த்திய, எம்ஜிஆரின் மறு உருவாக விளங்கும் பொற்கால முதல்வா் விஜய் தலைமையில் தொடா்ந்து மக்கள் பணியாற்றிட, என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள்!

நெல்லை மாநகராட்சியில் தவெகவினா் முற்றுகை

மாற்றமும் தடுமாற்றமும்!

த.வெ.க.வின் முதல் எம்.பி. யார்? தீவிர ஆலோசனை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
