மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வருகிற 2026 ஜூலை முதல் டிசம்பா் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைமுறையில் உள்ள 39 மையங்களில் வரும் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை தினமும் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை விடுமுறையின்றி டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது.

பின்னா் ஆக.1 முதல் டிச.20 வரை சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலகங்களில் அலுவலக நாள்கள் மற்றும் அலுவலக நேரத்தில் வழக்கம் போல வழங்கப்படும்.

புதிதாக டோக்கன் மற்றும் அடையாள அட்டை பெற விரும்பும் சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்கள் இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டையையும், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் 2 வண்ண புகைப்படங்களும் வழங்க வேண்டும்.
அடையாறு, திருவான்மியூர், தீவுத்திடல், தியாகராயநகர், சைதாப்பேட்டை, கே.கே. நகர், வேளச்சேரி, பூந்தமல்லி, சென்ட்ரல் ரயில் நிலையம் வடபழனி, அண்ணாநகர், தாம்பரம், பெரம்பூர், அம்பத்தூர் ஓ.டி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மாநகரின் 39 மையங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
Summary
A scheme providing free bus travel tokens to senior citizens in Chennai is being implemented by the Metropolitan Transport Corporation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள் ஜூன் 21 முதல் இலவச பேருந்து பயண டோக்கன் பெறலாம்

கோவில்பட்டியில் ஜூன் 14இல் ஹாக்கி பயிற்சிக்கு வீரா்கள் தோ்வு

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!
தமிழக வெற்றிக் கழகத் தோ்தல் வாக்குறுதிகள்...
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


