விஜய்க்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஷ் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாதது, அரசியலமைப்புக்கு முரணானது.
நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், விஜய்க்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. அவையில் தனது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆட்சியமைப்பதில் விஜய்க்கு சிக்கல்
நடந்து முடிந்த தமிழக தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5 எம்எல்ஏக்கள்) நேற்று ஆதரவு அளித்தது.
மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய் இரண்டாவது முறையாக ஆளுநரை இன்று சந்தித்துள்ளார். அப்போது போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை தவெக கோரியுள்ளது. இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் புதுவையில் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து திமுக, அதிமுகவும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. விஜய் எப்போது ஆட்சியமைப்பார் என தவெகவினர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Summary
Prakash Raj supports TVK Leader Vijay to form govt in tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

கடவுள் நம்பிக்கையில்லை; ஆனால்... பிரகாஷ் ராஜ் பதிலுக்குப் பெருகும் ஆதரவு!

தந்தைகளுக்குச் சமர்ப்பணம்..! வரவேற்பைப் பெறும் ஜிவியின் ஹேப்பி ராஜ்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

