தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 3 வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்ட லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் மூன்று பேரும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார்கள்.
லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு 2,739 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டின் மிகப் பணக்கார வேட்பாளராக அறியப்பட்ட லீமா ரோஸ் இப்போது, மிகப் பணக்கார எம்எல்ஏவாகவும் மாறியிருக்கிறார்.
மத்திய தமிழ்நாட்டில் முதல் பெண் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார் லீமா ரோஸ். பொதுவாகவே லால்குடி திமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே லீமா ரோஸ் முன்னிலை வகித்தார். அப்படியே முன்னிலையில் இருந்து அவர் வெற்றியை பெற்றார். இங்கு போட்டியிட்ட திமுகவின் பலம் வாய்ந்த பாரிவள்ளல் மற்றும் தவெகவின் கு.ப. கிருஷ்ணன் ஆகியோரையே வீழ்த்தியிருக்கிறார்.
இவருக்கும் லால்குடிக்கும் அடிப்படையில் எந்த தொடர்பும் இல்லை. இவர் தேவக்கோட்டைச் சேர்ந்தவர், கோவையில் வாழ்ந்து வரும் நிலையில், இவர் லால்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரது சொத்து மதிப்பு 1,049 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை எல்லாம் வீழ்த்தி 17302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
போட்டியிட்ட மூன்று பேரில் இவருக்குத்தான் குறைவான சொத்து மதிப்பு அதாவது ரூ.197 கோடி காட்டப்பட்டிருந்தது. இவருக்கு எதிராக இவரது நெருங்கிய நண்பர் கார்த்திகை திமுக களமிறக்கியிருந்தது. இவர்கள் திமுகவில் இருந்த போது கார்த்திக் - ஆதவ் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். கார்த்திக் ஏற்கனவே அண்ணா நகரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு களப்பணிகள் ஆற்றிவந்த நிலையில், ஆதவ்வை எதிர்ப்பதற்காக வில்லிவாக்கத்துக்கு மாற்றப்பட்டார்.
மார்ட்டின் மூத்த மகனும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவரும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவருக்கு மொத்த சொத்து ரூ.610 கோடி என்று காட்டப்பட்டிருந்தது. இவர்கள் மூவருமே வெற்றி பெற்று இரண்டு சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களாக மாறியிருக்கிறார்கள்.
Summary
Three members of the same family, who contested from three parties, have all won in two assembly elections, in Tamil Nadu and Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின் வெற்றி

லால்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

