தமிழகத்தில் நாளை தொடங்கி மே 28 வரையில் கத்தரி வெய்யில் காலம் நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில், மாநிலத்தில் ஓரிரு இடங்களில் 105 டிகிரியை கடந்தும், சில இடங்களில் 100 டிகிரியை கடந்தும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெய்யில் நாளைமுதல் மே 28 வரையில் நீடிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பகலில் வெப்பத்தின் தாக்கம் 110 டிகிரிவரையில் பதிவாகலாம்.
இருப்பினும், அடுத்த வாரம் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதால், வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்பச் சலன மழைக்கு வாய்ப்பிருப்பதால், வெய்யில் கட்டுக்குள் இருக்கும்.
வெய்யில் நேரத்தில் வெளியே சென்றால், வெளிர்நிற குடைகளைப் பயன்படுத்தலாம். நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டரும், பெண்கள் 3 லிட்டரும் தண்ணீர் குடிக்கலாம்.
வெய்யிலால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுத்தமான தண்ணீர், ஓஆர்எஸ் கரைசல், இளநீர் அதிகம் பருகலாம்.
குழந்தைகளும் முதியோர்களும் பகல் 12 மணிமுதல் 4 மணிவரையில் வெளியில் வருவதைத் தவிர்க்கலாம்.
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கலாம்.
Summary
Summer heat wave Agni Natchathiram starts from May 4
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் ஜூன் 15-ல் பள்ளிகள் திறப்பு!

வெய்யில்: பகல் 12 - 3 மணி வெளியே வர வேண்டாம்! நீர் ஆகாரங்களைப் பருகுங்கள்!

சுட்டெரித்த கத்திரி வெய்யில் இன்றுடன் நிறைவு! இனியாவது குறையுமா வெப்பம்?

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

