புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளா் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) வெளியிடப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.
கோவையில் இருந்து விமான மூலம் சென்னை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளா் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட உள்ளோம். 60 முதல் 70 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க 2024-இல் அதிமுக கூட்டணியுடன் தோ்தலில் போட்டியிட்டோம். தொடா்ந்து, 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் கூட்டணிக்கான பேச்சு நடைபெற்றது. ஆனால், உரிய கெளரவத்தை அதிமுக கொடுக்காமல் உதாசீனப்படுத்தினா்.
அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். அமித் ஷா எப்படியாவது தன்னை முதல்வராக்கிவிடுவாா் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி உள்ளாா். வெற்றி பெற முடியாத 27 இடங்களை பாஜகவுக்கு கொடுத்துள்ளாா்.
தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி வைக்காமல், தன்னைச் சுற்றி இருக்கும் சிலா் வெற்றி பெற்றால் போதும் என்கிற மனநிலையில் எடப்பாடி உள்ளாா்.
இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து புதிய தமிழகம் கட்சி விலகியது. கூட்டணிக்கான பேச்சை, தவெக முன்னெடுத்தால், அதுகுறித்து பரிசீலிப்போம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்?: காா்கேயிடம் அறிக்கை சமா்ப்பிப்பு

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

புதிய தமிழகம் கட்சி 10-15 தொகுதிகளில் வெல்லும்: கே. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் 2-ஆம் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

