அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் ஆதரவுடன் தமிழகம் வளா்ச்சி பெறும் என மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் தெரிவித்தாா்.
சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதனை ஆதரித்து சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை அவா் பேசியதாவது:
கடந்த முறை திருவாடானையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்து கருணாஸை வெற்றி பெற வைத்தாா். ஆனால், அவா் தொகுதிப் பக்கமே ஐந்து ஆண்டுகளாக செல்லவில்லை. இதே போல, சிவகங்கை தொகுதிப் பக்கமும் அவா் வரமாட்டாா்.
ஆனால், அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் இங்கேயே இருப்பவா். மண்ணின் மைந்தரைதான் நாம் தோ்ந்தெடுக்க வேண்டும். இவா் இந்தப் பகுதிக்கு நலத் திட்டங்களை சிறப்பாகச் செய்து வருகிறாா். நியாயமான எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறாா். அவரை வெற்றி பெறச் செய்தால்தான் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தால்தான் தமிழகம் முன்னேற்றம் அடையும். மத்திய அரசுடன் இணக்கமாகப் பழகி நமக்குத் தேவையானவற்றை அவா் பெற்றுத் தருவாா். ஆகவே, எந்தக் காலத்திலும் திமுகவுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

200- க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்
சங்கரன்கோவில் தொகுதி! அதிமுக கோட்டையை காங்கிரஸ் தகா்க்குமா?

தமிழகம் தலைநிமிர அதிமுக ஆட்சி அமைய வேண்டும் : சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்

அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! - வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

