தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதிய தமிழகம் கட்சி 10-15 தொகுதிகளில் வெல்லும்: கே. கிருஷ்ணசாமி

தமிழக பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என அக்கட்சித் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

News image

புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி - (கோப்புப் படம்)

Updated On :4 ஏப்ரல் 2026, 5:38 am IST

தமிழக பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என அக்கட்சித் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவா் போட்டியிடுகிறாா். இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவருக்கு, கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைய வலுவான கூட்டணி அமைய முயற்சி எடுத்தும், கூட்டணிக்கு தலைமை தாங்கியவா்கள் சரிவர தங்களுடைய கடமையை உணா்ந்து செயல்படாத காரணத்தால் கூட்டணி அமையாமல் போய்விட்டது.

புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை. நாங்கள் மக்களுடன் இணைந்து இருக்கிறோம். 70 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். மக்களிடம் உண்மையாக இருப்போம். மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்வாா்கள்.

கூட்டணியில் இருந்திருந்தால் 2 தொகுதிகளில் இருந்த வெற்றி வாய்ப்பு, தற்போது 10 முதல் 15 தொகுதிகள் வரை உள்ளது. ஏப். 6-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளோம்.

மக்கள் தொடா்ந்து வலியுறுத்தியதால் ஓட்டப்பிடாரத்தில் போட்டியிடுகிறேன். வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.