சென்னை மயிலாப்பூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
தொடர்ந்து இன்று(புதன்கிழமை) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று மயிலாப்பூரில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
என்டிஏ கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக போட்டியிடும் தொகுதியில் இருந்து இபிஎஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் தேரடி வீதியில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுள்ளார். ஒரே வேனில் இருவரும் நின்றபடி வாக்கு சேகரித்தனர்.
மயிலாப்பூர் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Senior BJP leader Tamilisai Soundararajan participates in AIADMK General Secretary Edappadi Palaniswami's campaign in mylapore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
விசில் சத்தம் 200-ஐ தாண்டும் என்பது ஓவர்: தமிழிசை விமர்சனம்

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு தாக்கல்!

மயிலாப்பூரில் த. வேலுவுக்கு எதிராக தமிழிசை சௌந்தர்ராஜன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


