மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு! தேர்தல் பிரசாரம் தொடங்கினார் இபிஎஸ்!

தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.

News image

எடப்பாடி பழனிசாமி - படம்: அதிமுக

Updated On :25 மார்ச் 2026, 5:03 pm IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் பிரசாரத்தை தொடங்கினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை இன்று (மார்ச் 25) தொடங்கினார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த ஜூலை மாதம் கோவை மாவட்டத்தில் தொடங்கினார். பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக இந்த பிரசாரத்தை அவர் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், தேர்தல் பிரசாரத்தை இன்று எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, இன்று தொடங்கி ஏப். 1 வரை பிரசாரம் செய்யவுள்ளார்.

மயிலாப்பூர் தொகுதியில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட இபிஎஸ், பின்னர் பிரசாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து மார்ச் 27- ஆலந்தூர், தாம்பரம், மார்ச் 28 - ஆர்.கே.நகர், திருவொற்றியூர், மார்ச் 28-நாகர்கோவில், ராதாபுரம், மார்ச் 30 கடையநல்லூர், கோவில்பட்டி, மார்ச் 31 - சிவகாசி, பரமக்குடி, ஏப்ரல் 1 - சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

Summary

EPS worship at the Mayilai Kapaleeswarar temple! Election campaign begins!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.