மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மயிலாப்பூரில் த. வேலுவுக்கு எதிராக தமிழிசை சௌந்தர்ராஜன்!

மயிலாப்பூர் தொகுதியில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பாளராக அறிவிப்பு..

News image

தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 3:47 pm IST

சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றான மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜகவின் முக்கிய தலைவர்களாக விளங்கும் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியிலும்,கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவினாசியில் எல். முருகன் போட்டியிடுகின்றனர்.

அதேசமயம் சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் இவர் முதன்முறையாக களம் காண்கிறார்.

முன்னதாக, மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற சிக்கல் பாஜகவினர் இடையே நிலவி வந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் இணைந்து அதிமுகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

இன்று பாஜகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 27 பேரின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியான நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌர்ராஜன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் த. வேலு போட்டியிடுகிறார்.

Summary

BJP leader Tamilisai Soundararajan has been announced as the candidate for the Mylapore constituency in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.