திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே இன்று(மார்ச் 24) மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு நடத்தி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வருகிறது.
அதன்படி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினருடன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழு தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை, அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2 ஆம் தேதி நடத்தியது.
அப்போது, போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை திமுக குழுவிடம் விசிக குழு வழங்கியது.
அன்று நடைபெற்ற திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையேயான முதல்கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை விசிகவுக்கு 5 தனித் தொகுதிகள், 3 பொது தொகுதிகள் என 8 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அடுத்தடுத்து நடைபெற்ற திமுக - விசிக பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டாமல் தொடர்ந்து இழுபறியில் நீடித்து வருகிறது.
இதனிடையே, திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - விடுதலைச் சிறுத்தைகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையொப்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
Summary
Seat-sharing talks between the DMK and the Liberation Tigers of Tamil Nadu are taking place again today (March 24).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?

அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது மார்க்சிஸ்ட், விசிக..?
திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சு! இன்று கையெழுத்தாகிறது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


