திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இடையே இன்று(மார்ச் 18) மாலை 2 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு, இன்று மாலையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு நடத்தி வருகிறது. அதன்படி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினருடன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழு தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை, அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2 ஆம் தேதி நடத்தியது.
அப்போது, போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை திமுக குழுவிடம் விசிக குழு வழங்கியது.
அன்று நடைபெற்ற திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையேயான முதல்கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கிடையே இன்று(மார்ச் 18) மாலை 2 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டவுடன் இன்று மாலையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை விசிகவுக்கு 5 தனி தொகுதிகள், 3 பொது தொகுதிகள் என 8 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that the second phase of seat-sharing talks between the DMK and the Liberation Tigers of Tamil Eelam are scheduled to take place this evening (March 18).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது மார்க்சிஸ்ட், விசிக..?

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
