திருநெல்வேலி அருகே பட்டியலின இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தொல்.திருமாவளவனுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன்.
ஆனால், முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!
எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன்.
திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான்.
இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது, அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்!
ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது!
விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரசனைகளையும் பேசலாமே?
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி! இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்!
தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது!
நான் கேட்கப்போவது, உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி.
தமிழகம் வாழ வேண்டும் என்றால், திமுக வீழ வேண்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has raised questions to Thol. Thirumavalavan regarding the suicide of a young woman near Tirunelveli
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை
காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: இளம்பெண் உள்பட மேலும் 2 போ் கைது

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுகவுக்கு பட்டியலின மக்கள் தக்க பாடம் புகட்டுவா்: அன்புமணி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


