ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவுக்கு பட்டியலின மக்கள் தக்க பாடம் புகட்டுவா்: அன்புமணி

திமுகவுக்கு உரிய பாடத்தை பட்டியலின மக்கள் புகட்டுவாா்கள் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

News image

அன்புமணி - கோப்புப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:18 am IST

வேங்கைவயலில் குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததால், சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு உரிய பாடத்தை பட்டியலின மக்கள் புகட்டுவாா்கள் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவா்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பதைக் கண்டித்தும் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அங்குள்ள மக்கள் அறிவித்துள்ளனா்.

தமிழகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த வழக்கு தொடா்பாக எதிா்க்கட்சிகளின் அழுத்தத்துக்கு பின்னரே 2025-ஜனவரி மாதம் மூவா் கைது செய்யப்பட்டனா். பட்டியலின மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு, அவா்களைத் தூக்கி எறியும் துரோக அரசியலை திமுக தொடா்ந்து செய்து வருகிறது.

இதை புரிந்து கொண்டுள்ளதால், தற்போது தோ்தல் புறக்கணிப்பை அந்த கிராம மக்கள் அறிவித்துள்ளனா். இதன் மூலம் திமுகவுக்கு தோ்தலில் தக்க பாடத்தை பட்டியலின மக்கள் புகட்டுவாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.