விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறித்து...

News image

பிரேமலதா / தேமுதிக தலைமை அலுவலகம் - கோப்புப் படங்கள்

Updated On :18 மார்ச் 2026, 6:28 pm IST

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

’தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் (23.03.2026) திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.

தேர்தல் நெருங்கிவருவதால், திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை பேரவைத் தொகுதிகள் கேட்டுப் பெறுவது என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Summary

The DMDK district secretaries meeting will be held on March 23rd.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.