விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

3 நாள்களில் ரூ. 42.65 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம்

தேர்தல் தேதி அறிவித்த 3 நாள்களில் ரூ. 42.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது குறித்து...

News image

அர்ச்சனா பட்நாயக் - கோப்புப் படம்

Updated On :18 மார்ச் 2026, 6:07 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவித்த 3 நாள்களில் ரூ. 42.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இதன்படி, தனிநபர் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து, தேர்தலுக்கான தொடர் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடியை எட்டியுள்ளது.

தேர்தல் காலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சோதனைப் பணிகள் மேலும் தீவிரமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Tamil Nadu Chief Election Commission has announced that Rs. 42.65 crore was seized in the 3 days since the date of the Tamil Nadu Assembly elections to be held in 2026 was announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.