விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? பிரேமலதா நாளை ஆலோசனை

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 23) நடைபெறவுள்ளது குறித்து...

News image

பிரேமலதா விஜயகாந்த் / தேமுதிக அலுவலகம் - கோப்புப் படங்கள்

Updated On :22 மார்ச் 2026, 4:39 pm IST

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 23) நடைபெறவுள்ளது. இதில் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணித் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

இம்முறை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.எம்.யு.எல்.) உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டணியில் தேமுதிகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து திமுக - தேமுதிக பேச்சுவார்த்தைக்குப் பிறகு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. சட்டப்பேரவையில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.

இதனிடையே தேர்தல் பணிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை (மார்ச் 23) ஆலோசிக்கவுள்ளார்.

Summary

DMDK district secretaries meeting tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.