புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தையை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி புறக்கணித்துள்ளதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் கடந்த 2021 தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் தற்போது ஆட்சியில் உள்ளது.
வரும் தேர்தலிலும் பாஜகவுடன் என்.ஆர். காங்கிரஸ் இணைந்து போட்டியிட உள்ளதாகவே தகவல் வெளியானது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தின.
அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை ரங்கசாமி முன்வைத்ததாகவும் அதற்கான உறுதிமொழியை பாஜக தர வேண்டும் என்று கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2021 தேர்தலைப்போலவே ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியிருந்தார்.
மேலும் புதிய கட்சிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் இன்று காலை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த என்.ஆர். காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா காத்திருந்தார். ஆனால், முதல்வர் ரங்கசாமி இந்த பேச்சுவார்த்தையைப் புறக்கணித்துள்ளார். இதனால் பாஜகவினர் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து திரும்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுபற்றி பேசுவதற்கு தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், என்டிஏ கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் புதிதாகத் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சி இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அதற்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாததாலும் தற்போதைய ஆட்சியில் ரங்கசாமிக்கு தெரியாமலேயே 3 பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்தது, ஆளுநர் மூலமாக பல்வேறு அழுத்தங்கள் கொடுத்தது ஆகியவற்றாலும் ரங்கசாமி அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் தவெகவுடன் என்.ஆர். காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
இதனிடையே புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நேற்று(மார்ச் 16) தொடங்கிய நிலையில் நேற்று யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. புதுச்சேரிக்கு வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Is the N.R. Congress leaving from BJP alliance in Puducherry?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! மீண்டும் என்டிஏ ஆட்சி!

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உடைகிறது?

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - தவெக கூட்டணி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


