புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றன. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இரு கட்சிகளின் தலைவர்களிடையே கடந்த வாரம் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், உடன்பாடு எட்டப்படவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கான உறுதிமொழியை வழங்க வேண்டும், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினால் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற இரு முக்கியமான நிபந்தனைகளை பாஜக தலைமைக்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், லட்சிய ஜனநாயகக் கட்சி தொடர்பான என்.ஆர். காங்கிரஸின் நிபந்தனையை பாஜக மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், புதுச்சேரி தனியார் விடுதியில் இன்று காலை நடைபெறவிருந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையை ரங்கசாமி புறக்கணித்துள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் காத்திருந்த புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியிருக்கும் சூழலில், நிபந்தனைகள் குறித்து முடிவெடுக்க பாஜகவுக்கு 24 மணிநேரம் ரங்கசாமி கெடு விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்துடன் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்.ஆர். காங்கிரஸின் நிபந்தனைகளை பாஜக ஏற்காவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க என்.ஆர். காங்கிரஸ் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
NR Congress–TVK Alliance in Puducherry?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! மீண்டும் என்டிஏ ஆட்சி!

புதுவையில் ஆட்சியைத் தக்கவைக்கிறதா என்.ஆர். காங்கிரஸ்? கருத்துக் கணிப்பு!

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


