பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ இல்லையோ, ஆனால், பெட்ரோல் நிலையங்களில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, நாமும் பெட்ரோல் நிரப்பி விடுவோம் என்ற உணர்வுடன்தான் பெரும்பாலானோர் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். ஒரு சிலர், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பெட்ரோல் நிலையம் வந்தாலும், பெரும்பாலானோர், நாளை இதைவிட நீண்ட வரிசைக் காணப்படுமோ என்ற அச்சத்தில்தான் பெட்ரோல் நிரப்பிச் செல்கிறார்கள்.
விழுப்புரத்தில் ஒருவர், 25 லிட்டர் தண்ணீர் கேனில் பெட்ரோலை நிரப்பிச் செல்லும் விடியோக்கள் நேற்று இரவு முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்த பலருக்கும் அச்ச உணர்வை ஊட்டியிருக்கலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் மகளிர் உரிமைத் தொகை குறித்து பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போதோ, உங்கள் வீட்டில் சிலிண்டர் முன்பதிவு செய்துவிட்டீர்களா என்று முன் பின் தெரியாதவர்களைக் கூட பார்த்துக் கேட்கும் நிலையில் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையேதான் நேற்ற முதல் பெட்ரோல் பீதி கிளம்பியிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக வீட்டு உபயோக எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில் பெட்ரோலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் எழுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தட்டுப்பாடு ஏற்படாது என எண்ணெய் நிறுவனங்கள் கூறி வந்தாலும், நேற்று வரை சும்மா இருந்த மக்கள் நேற்று மாலை முதலே பெட்ரோல் பங்குகளில் தங்கள் வண்டிகளுக்கு பெட்ரொல் நிரப்பி வருகின்றனர்.
ஈரானில் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெட்ரோல் உற்பத்தி முற்றிலும் தடை செய்யப்பட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என வாட்ஸ்ஆப்-ல் வதந்தி பரவியதால் நேற்று முதல் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வருகிறார்கள்.
தீபாவளி, பொங்கலுக்கு ஸ்டேட்டஸ் வைப்பது போல, நேற்று இரவு முழுவதும் நள்ளிரவு நேரத்தைக் குறிப்பிட்டு பலரும் தாங்கள் இத்தனை மணி நேரம் பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருப்பதாக, தங்களுக்கு முன் நின்றுகொண்டிருந்த வாகனங்களின் நீண்ட வரிசையை புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப்களில் ஸ்டேட்டஸ் வைக்க, அதனைப் பார்த்த பலரும், தங்களது வண்டிகளையும் நேராக பெட்ரோல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். இதுதான் உண்மை நிலவரம்.
இன்றும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பெட்ரோலை வாங்க போட்டி போட்டுக் கொண்டு பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
சில பெட்ரோல் நிலையங்களில் அதிகளவு மக்கள் கூடியதால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் போட குவிந்தவர்களை ஒழுங்குப்படுத்தி வரிசையில் பெட்ரோல் போட அனுமதித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சி.என்.ஜி. எரிவாயு தட்டுப்பாடு : வேலூரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு

21 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு: தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா் சங்கத் தலைவா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

