பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிக்கையைப் போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் போருக்கு மத்தியில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், சில நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலும் மே 1 முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 10, டீசல் லிட்டருக்கு ரூ. 12.50 உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் போலியான அறிக்கை பரவி வந்தது.
கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப்படும் என கடந்த சில நாள்களாகவே வதந்திகள் பரவி வந்தன.
இதனிடையே, போலி அரசு அறிக்கையும் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரபூர்வமாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் கூறியிருப்பதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததாகக் கூறி மத்திய அரசு வெளியிட்டதாகப் பரவி வரும் அறிக்கையானது முற்றிலும் போலியானது. இதுபோல எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. எந்த அறிவிப்பாக இருந்தாலும், அரசின் அதிகாரபூர்வ தளங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
Summary
Government Debunks Fake Order Claiming Hike in Petrol and Diesel Prices
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!
வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

