பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து வெளியான செய்திகள் பொய்யானவை என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் விளக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு லிட்டருக்கு ரூ. 25-28 வரை உயரக்கூடும் என சில செய்திகள் ஊடகங்களில் பரவி வந்தன.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சகம் பதிவிட்டிருப்பதாவது:
“பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திடம் இதுமாதிரியான எந்த திட்டத்துக்கான முன்மொழிவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
இதுபோன்ற செய்திகள் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்படுகிறது. மேலும், மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உண்மையில், கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரவில்லை என்று சொல்லக்கூடிய ஒரே நாடு இந்தியா ஆகும்.
சர்வதேச விலைகளில் ஏற்படும் கடுமையான உயர்வுகளிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாப்பதற்காக, இந்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இடைவிடாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் காணப்படும் பதற்றமான சூழல்; அதனால், அதிகரிக்கும் கச்சா எண்ணெய்யின் விலை போன்ற இக்கட்டான சூழல்களிலும் பெட்ரோல், டீசல் விலை பெரிதாக உயராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Ministry of Petroleum and Natural Gas has clarified that the reports regarding a hike in petrol and diesel prices are false.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்
வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


