ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி, 21 நாள்களிலிருந்து 25 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசிய போர் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹர்தீப் சிங் புரி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
முன்னதாக, சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு 21 நாள்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட 25 நாள்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை இனி செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மூடிவிட்டதால், வேறு வழித்தடங்கள் வழியில் கச்சா எண்ணெய்யை பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The central government has announced that the time limit for booking a cooking gas cylinder has been increased from 21 days to 25 days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!

சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது: ‘இந்தியன்ஆயில்’ தகவல்

பயணிகள் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவற்கான கால இடைவெளி குறைப்பு

ஊரகப் பகுதிகளில் சிலிண்டா் முன்பதிவு இடைவெளி 45 நாள்களாக அதிகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


