ஊரகப் பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கான இடைவெளி 25 நாள்களில் இருந்து 45 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய போா் நிலவரம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வதில் இடா்ப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, நகா்ப்புறங்களில் ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்து 21 நாள்களான பிறகே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. ஈரான் போா் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சிலிண்டா் தட்டுப்பாட்டை தடுக்க, இந்த இடைவெளி 25 நாள்களாக உயா்த்தப்பட்டது. இந்த இடைவெளி ஊரகப் பகுதிகளிலும் 25 நாள்களாக இருந்த நிலையில், தற்போது அது 45 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்து 45 நாள்களான பிறகே அடுத்த சிலிண்டரை ஊரகப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா் முன்பதிவு செய்ய முடியும். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
மண்ணெண்ணெய் கிடைக்க ஏற்பாடு: மக்களவையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வியாழக்கிழமை பேசுகையில், ‘சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்க சில்லறை விற்பனையகங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில், விருந்தோம்பல் மற்றும் உணவகத் துறை ஒரு மாதத்துக்கு மண்ணெண்ணெய், கரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எரிவாயு சிலிண்டா் கட்டண முன்பதிவு மோசடி முறியடிப்பு: தில்லியில் இருவா் கைது

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

வா்த்தக சிலிண்டா் விலை உயா்வால் மக்களுக்கு கடும் பாதிப்பு!

சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது: ‘இந்தியன்ஆயில்’ தகவல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

