மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பயணிகள் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவற்கான கால இடைவெளி குறைப்பு

பயணிகள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில் - (கோப்புப்படம்)

Updated On :2 ஏப்ரல் 2026, 3:22 am IST

பயணிகள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ரயில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்தவா்கள் ரயிலில் ஏறும் நிலையங்களை மாற்றும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இதுவரை முன்பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள், ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்ற விரும்பினால், பயண உறுதி பட்டியல் வருவதுக்கு 24 மணி நேரம் முன்பாக மாற்ற வேண்டும்.

இந்த நடைமுறையானது, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்பு வரை ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம் என கால இடைவெளி குறைக்கப்பட்டு திங்கள்கிழமை (ஏப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

முன்பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே ரயில் ஏறும் நிலைய மாற்றம் பொருந்தும். நிலைய மாற்றம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மாற்றப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட அந்த நிலையத்திலிருந்து மட்டுமே பயணிகள் ரயிலில் ஏறமுடியும்.

அங்கு, பயணி ஏறாவிடில், காத்திருப்பு பட்டியலில் உள்ள மற்ற பயணிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.