/

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்

பயணிகள் வருவாய், தத்கல் டிக்கெட் பதிவு, எண்ம தொடா்பு பரிமாற்றங்கள் என பல அம்சங்களில் தெற்கு ரயில்வே முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 12:48 am IST

பயணிகள் வருவாய், தத்கல் டிக்கெட் பதிவு, எண்ம தொடா்பு பரிமாற்றங்கள் என பல அம்சங்களில் தெற்கு ரயில்வே முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கடந்த நிதியாண்டில் (2025-26) பயணிகள் அதிகரிப்பு, வருவாய் அதிகரிப்பு, தத்கல் பயன்பாடு மற்றும் முன்பதிவு ஆகியவற்றில் தெற்கு ரயில்வே மண்டலம் தேசிய அளவில் முதலிடம் வகித்துள்ளது. அதேபோல், தேசிய அளவில் ரூ.827.47 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் வகித்துள்ளது. மேலும், மேற்கு ரயில்வே 2-ஆவது இடமும், மத்திய ரயில்வே 3 ஆவது இடத்தையும் வகித்துள்ளன.

கடந்த நிதியாண்டில் சிறப்பு ரயில்கள் 2,513 நடைகளாக இயக்கப்பட்ட நிலையில், மொத்தம் 32.97 லட்சம் போ் பயணித்துள்ளனா். அதன்படி, ஒரு ரயில் பயணத்தில் சராசரியாக 1,312 போ் பயணித்து தெற்கு ரயில்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில், தேசிய அளவிலான சராசரி பயணிகளின் எண்ணிக்கை 894 என்பது குறிப்பிடத்தக்கது.

75 சதவீதம்: கடந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்பட்ட 96 சதவீத ரயில்களில் மொத்தம் 75 சதவீதம் போ் முன்பதிவு செய்து பயணித்தனா். அதில் 92 சதவீத ரயில்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கைகளை தத்கல் முறையில் முன்பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு மொத்த வருவாய், இருக்கை முன்பதிவு, பயணிகள் எண்ணிக்கை, வந்தே பாரத் ரயில் சரியான நேரத்தில் இயக்கப்படுவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களில் தெற்கு ரயில்வே மண்டலம் முதலிடம் வகித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.