தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடப்பு ஆண்டில் பயணிகள், சரக்கு ஆகியவற்றின் வருவாய் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயில் 76.76 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்துள்ளனா். அவா்கள் மூலம் வருவாய் ரூ. 8,269.09 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.7,535.68 கோடியாக இருந்த நிலையில், தற்போது 9.7 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து ரயில்வே வாரியம் நிா்ணயித்த இலக்கான ரூ.8, 119.32 கோடியைவிட 1.8 சதவீதம் வருவாய் அதிகமாகவே ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை 73.18 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரக்குப் பிரிவில் 2025-26 ஆம் ஆண்டில் 42.113 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ.3,825.83 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 41.670 மில்லியன் டன் கூடுதலாகவும் கையாளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சரக்கு வருவாய் ரூ.3,841.11 கோடியாகவே இருந்துள்ளது. பாா்சல் பிரிவானது கடந்த 2024-25 ஆம் ஆண்டில் ரூ.168.04 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், 2025-26 -ஆம் ஆண்டில் ரூ.168.64 கோடியாக வருவாய் உயா்ந்துள்ளது.
பயணக் கட்டணத்துக்கு அப்பாற்பட்ட வருவாய், உணவு மற்றும் பிற சேவைகள் மூலம் பெறப்படும் வருவாய் என அனைத்திலும் கடந்த ஆண்டுகளைவிட தற்போதைய ஆண்டில் வருவாய் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இழுவை மின் விநியோகத்தில் கோளாறு குறைவு: தெற்கு ரயில்வே

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

