முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான டென்டரில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் சட்டப்பேரவை கொறடாவுமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதி.ரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு , திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
2006 முதல் 2011 வரை அமச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக எ.வ. வேலு மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழுமையானத் தகவல்கள் தெரியவரும்.
இத்துடன் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Summary
Ongoing raids by the Directorate of Vigilance and Anti-Corruption Case registered against 11 individuals, including E.V. Velu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக மம்தா மீது வழக்குப் பதிவு - மேற்கு வங்க காவல் துறை நடவடிக்கை
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை


