திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகத்தை விமர்சித்து வெளியான கட்டுரைக்கு அக்கட்சி எதிர்வினையாற்றியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தது.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்ததாக திமுக தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்க்கவே தவெகவுக்கு ஆதரவளித்தோம், இது எங்கள் கட்சியின் முடிவு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் பெ. சண்முகம் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், ”புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் பெ. சண்முகம் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.
அதில், தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்ததன் மூலம், குடியரசு தலைவர் ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்திருக்கிறோம் என்றும், திமுக ஆதரவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்திருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த கட்டுரையை விமர்சித்து, முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில், “குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடும், தேர்தல் வந்துவிடும் என்று சொல்வது எல்லாம் உலகப் பம்மாத்து ஆகும். சண்முகத்தின் உண்மையான நோக்கம், திராவிடக் கட்சி இல்லாத ஆட்சி அமைய ஆதரவு என்பதுதான். அதனால்தான் த.வெ.க. ஆட்சியை விழுந்தடித்து போய் ஆதரித்துள்ளோம் என்பதை சண்முகமே கக்கிவிட்டார்.
144 உறுப்பினர் ஆதரவுடன் விஜய் தனது பெரும்பான்மையை நீரூபித்து உள்ளார். இதில் அதிமுகவைச் சேர்ந்த 25 உறுப்பினர் ஆதரவும் இருக்கிறது. அதிமுக தயவுடன் அமைந்துள்ள ஆட்சியை ஆதரிப்பது சண்முகத்துக்கு கேவலமாகத் தெரியவில்லையா? சி.வி.சண்முகமும் பெ.சண்முகமும் ஒரே நேர்கோட்டில் தான் நீற்கிறார்கள். கொள்கைப் புடலங்காய் ஏதுமில்லை.” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், முரசொலி கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ”பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்) கட்சிக்கு எப்போதும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
BJP-DMK-AIADMK alliance - Marxist Communist Party hits back to DMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியில் சிபிஐ விலகல்! யார் இல்லாவிட்டாலும் கவலையில்லை: ஆர்.எஸ். பாரதி

எதிர்க்கட்சிக்கான கண்ணியத்தை காங்கிரஸ் கடைப்பிடிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்!
திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஒரே ஆண்டில் நிறைவேற்றவில்லை: பெ. சண்முகம்

தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


