திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாவிட்டாலும் கவலையில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1971-ல் எங்களுடன் இருந்தனர்; பின்பு சென்று விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 1978-ல் இருந்தனர்; பின்னர், சென்று விட்டனர்.
இவர்கள் இப்படி பலமுறை எங்களுடன் இருந்தார்கள், போனார்கள். அதேபோல இன்று பிரிந்து செல்கின்றனர்.
இப்போதைக்கு திமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். எப்போதைக்கும் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. திமுகவை பொருத்தவரையில் - வந்தால் அவர்களோடு; வராவிட்டால் அவர்களில்லாமல்.
அவர்கள் எதிர்த்தால், அவர்களையும் எதிர்த்து திமுகவின் பயணத்தை தொடரும் என்பதுதான் வரலாறு. அவர்களுக்கு இந்த ஒருநாளில் ஏற்பட்ட சங்கடத்தை நீங்கள்தான் கேட்டறிய வேண்டும்.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் கவலைப்படுவதேயில்லை" என்று தெரிவித்தார்.
Summary
No concern even if Communist parties are not in the DMK alliance: Former Minister R.S. Bharathi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்!

இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: டி.கே.எஸ். இளங்கோவன்

திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா? ஆர்.எஸ். பாரதி பதில்!

நன்றிகெட்ட காங்கிரஸ்: ஆர்.எஸ். பாரதி ஆவேச பேட்டி!
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


