அப்படியென்றால் இன்றைக்கும் மின்சாரம் கிடைக்காதா? என சட்டப்பேரவை நிகழ்வைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வைகைச்செல்வன் பதிவிட்டுள்ளதாவது:
இன்றைய சட்டமன்றத்தில்…
‘பவரை’ இழந்தவர்கள்
‘பவர்’ கட்டைப் பற்றிப்
பேசுகிறார்கள்..!
‘பவரை’ வைத்திருப்பவர்களோ…
‘பியூஸ் கேரியரைக்’ காணவில்லை என்கிறார்கள்
அப்படியென்றால் இன்னைக்கும் கரண்ட் வராதா..? என பகடியாகப் பதிவிட்டுள்ளார்.
பேரவையில் மின்வெட்டு விவாதம்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வரை விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.
''நமது முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில், தமிழ்நாட்டிலேயே அவரது பெரம்பூர் தொகுதியை நம்பர் 1 ஆக மாற்றிவிட்டார். மின்வெட்டில் பெரம்பூர் தொகுதிதான் நம்பர் 1 ஆக உள்ளது.
ஆளுங்கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள், அண்ணன் பவருக்கு வந்தால் தமிழ்நாடு மாறும் என்று பார்த்தோம், ஆனால், அண்ணன் கைக்கு பவர் வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்'' என சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்,
தமிழ்நாட்டில் எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று ஒவ்வொரு நாளும் விளக்கம் அளித்து வருகிறோம். இந்த துறையில் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. 15 ஆண்டுகளாக எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 70,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பிரச்னையாக சரி செய்யப்பட்டு வருகின்றது என விளக்கம் அளித்தார்.
இதன் பிறகு மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பேசினார். இப்போது உள்ள ஊழியர்களை வைத்துதான் முந்தைய ஆட்சியில் தடையற்ற மின்விநியோகம் செய்யப்பட்டது எனவும் விளக்கம் அளித்தர்.
மின்வெட்டு குறித்து சட்டப்பேரவையில் நிகழ்ந்த உரையைக் குறிப்பிடும் விதமாக வைகைச் செல்வன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Summary
Won't power supply be restored today? Vaigaichelva question raised with reference to the Assembly proceedings
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடை விலகியது!

தடை விலகியது!
தமிழ்நாட்டில் 76% மக்கள் திமுகவுக்கு எதிராக தீர்க்கமான முடிவு: முதல்வர் விஜய்

மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முதல்வர் விஜய்! வரவேற்ற உதயநிதி!!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


