லக்னௌ பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்திலிருந்து தப்பிக்க, மாடியிலிருந்து குதித்த இளைஞர்களும் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌ, அலி குஞ்ச் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், ஒரு கட்டத்தில் இரண்டு தளங்களில்இயங்கி வந்த பயிற்சி நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இங்கு நூலகம், கணினி பயிற்சி வகுப்புகள் இயங்கி வந்துள்ளன என்று கூறப்படுகிறது.
லக்னௌ பயிற்சி நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பலியானதாகவும் 13 மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் பிரஜேஷ் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சி மையத்துக்குள் சிக்கியிருப்பவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். தீயிலிருந்து தப்பிக்க சிலர் கட்டடத்திலிருந்து குதித்திருக்கிறார்கள், சிலர் கழிப்பறைகளுக்குள் தாளிட்டுக் கொண்டு பலியாகியிருக்கிறார்கள். கட்டடத்தின் பின்பக்க சுவரில் பெரிய துளை போட்டு அதன் வழியே பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
தீ விபத்துக்குள்ளான கட்டடத்தின் சுவர்கள் இடிந்து விழுந்ததால், தீயணைப்பு வீரர்களுக்கு மீட்புப் பணிகள் சிரமமாகியிருக்கிறது.
Summary
Fire at Lucknow coaching centre: 14 dead
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் 3 பேர் பலியான துக்ளகாபாத் குடியிருப்பு தீ விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 4 நோயாளிகள் பலி!

தில்லி தீ விபத்தில் பலி 21 ஆக உயர்வு! என்ன நடந்தது?
தில்லி உணவகத்தில் தீ விபத்து: 21 பேர் பலி; மேலும் சிலர் கவலைக்கிடம்!
விடியோக்கள்

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

