அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக....

News image

ஆதவ் அர்ஜுனா - படம்: டிஐபிஆர்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வரின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி, சிறப்பு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சிபெற்று வரும் 2,600 மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கவும், அவர்களது திறன் மேம்படுவதற்கு தினசரி உணவுப்படி, சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

1. தினசரி உணவுப்படி உயர்த்தி வழங்குதல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி, சிறப்பு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் 2,600 மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பட ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதற்கு உணவுப்படி தொகையினை நாளொன்றுக்கு தலா ரூ. 350-லிருந்து ரூ. 450-ஆக உயர்த்தி வழங்கிட - தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான செலவினத் தொகை ரூ. 29.12 கோடியிலிருந்து ரூ. 37.44 கோடியாக உயர்த்தியதன் மூலம், ரூ.8.32 கோடி கூடுதலாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

2. சீருடைகளுக்கான தொகை உயர்த்தி வழங்குதல்

தினசரி பயன்பாட்டிற்கும், சுகாதாரமான முறையில் விளையாடும் வகையில் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளுக்கான தொகை ரூ. 6,000-த்திலிருந்து, ரூ. 15,000-ஆகவும், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளுக்கான தொகை ரூ. 10,000 நிதிலிருந்து ரூ. 25,000 ஆகவும் உயர்த்தி, இதற்கான செலவினத் தொகை ரூ. 1.70 கோடியிலிருந்து ரூ. 4.25 கோடியாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2.55 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. விளையாட்டு உபகரணங்களுக்கான தொகை உயர்த்தி வழங்குதல்

தனிநபர் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பிரத்யேக பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு தொகை ரூ. 2,000-த்திலிருந்து, ரூ. 10,000 ஆக உயர்த்தி இதற்கான செலவினத் தொகை ரூ. 80 லட்சத்திலிருந்து ரூ. 2.60 கோடியாக உயர்த்தப்ட்டுள்ளது. இதற்கான ரூ. 1.80 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2600 விடுதி விளையாட்டு வீரர்களின் உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ. 12.67 கோடி கூடுதலாக உயர்த்தி, செலவினத் தொகை ரூ, ரூ. 31.72 கோடியிலிருந்து ரூ. 44.39 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.

Summary

Minister for Public Works and Sports Development Adhav Arjuna has announced that the food allowance for sports hostel students has been increased.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.