எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவில் ஒரு பெண்கூட இடம்பெறவில்லை என்பதை திமுக எம்.பி. கனிமொழி, சனிக்கிழமை (ஜூன் 20) சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கல்வி ஆண்டுக்கான, இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு உறுப்பினர்களாக, ஒளிப்பதிவாளர்கள் வேல்ராஜ், விஜய் மில்டன், இயக்குநர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி, பேரரசு உள்ளிட்ட பத்து திரைத்துறை பிரபலங்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை.
பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
Summary
DMK MP Kanimozhi has pointed out that not a single woman is included in the admission selection committee of the MGR Film and Television Institute.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி

சமூக ஊடகம், ரீல்ஸ் முக்கியம்தான்! ஆனால் வீட்டிலும் அரசியல் பேசுங்கள்! கனிமொழி

சேலத்தில் பெண்களை மிரட்டி விடியோ எடுத்தவருக்கு அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! - கனிமொழி வலியுறுத்தல்!

கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

