கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2026 – 2027 கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு (டிஇஎல்எட்) மாணவர் சேர்க்கை ஜுன் 5 முதல் நடைபெற்று வருகிறது என அந்நிறுவன முதல்வர் ந.விசாலாட்சி கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஆசிரியராகும் கனவுடன் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், அதே சமயம் கல்லூரிகளில் உயர்கல்வி பயில வசதி வாய்ப்பற்றவர்கள், பள்ளிப் படிப்புடன் தங்கள் படிப்பை நிறுத்தி விடாமல், ஈராண்டு கால தொடக்கக் கல்வி பட்டயப் (டிஇஎல்எட்) படிப்பு பயின்றால் தொடக்கக்கல்வி ஆசிரியராகி விட முடியும். அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி பெறுவதற்கு டிஇஎல்எட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமான கல்வித் தகுதியாக உள்ளது.
இந்தப் பட்டயப் படிப்பை அரசு நிர்ணயித்துள்ள குறைவான கல்வி கட்டணம் மட்டும் செலுத்தி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயில்வதற்கு, பொதுப்பிரிவினர் 50 சதவிகித மதிப்பெண்களுடனும், மற்றப் பிரிவினர்கள் 45 சதவிகித மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், 30 வயது மிகாதவராக இருத்தல் வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், கலப்புத் திருமணம் செய்தவர்கள், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு வயது வரம்பில் அரசு விதிப்படி தளர்வு உள்ளது.
இங்கு சேர்க்கைப் பெறுவோருக்கு கல்வி உதவித் தொகை உள்பட அரசு வழங்கும் உதவிகள் அனைத்தும் அரசு விதிகளுக்குட்பட்டு பெற்றுத் தரப்படும்.
எனவே, இந்நிறுவனத்தில் சேர்ந்து படிக்க ஆர்வமுடையவர்கள் https://scert.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் தங்களுடைய கல்வி தகுதி சான்றிதழ்களையும், வயது தளர்வு மற்றும் மதிப்பெண் சலுகை பெறுவதற்குத் தேவையான சான்றுகளையும் பதிவேற்றம் செய்து, எஸ்ஸி, எஸ்டி பிரிவினர் எனில் ரூ. 250, மற்றப் பிரிவினர்கள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி ஜுன் 16 வரை விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கைத் தொடர்பான விவரங்கள் மேலும் தேவையெனில் இந்நிறுவனத்திற்கு நேரில் வரலாம் அல்லது 9944866733, 7708540512 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என முதல்வர் ந. விசாலாட்சி கூறினார்.
Summary
Student admissions begin at the Gangavalli Government Teacher Training Institute
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லியில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு 80 பேருக்கு பயிற்சி

ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை: முதல் நாளில் 8,505 பேர் விண்ணப்பம்!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


