நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ குளறுபடி விவகாரங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 8) வலியுறுத்தினார்.
தில்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. மொத்தம் 25 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பாஜகவின் வளர்ச்சியால் ஏற்படும் நெருக்கடிகள் குறித்தும் கூட்டணி உள்கட்சி முரண்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடன் வைகோ பேசியதாவது:
''இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் மனநிறைவாக அமைந்தது. நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குளறுபடி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சர் த்ர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 25 கட்சிகள் பங்கேற்றன'' என வைகோ குறிப்பிட்டார்.
Summary
NEET, CBSE issue: Union Minister must resign Vaiko
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வு: விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள்கள்!

நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
இனியும் தொடரக் கூடாது 'நீட்' தேர்வு!

நீட் வினாத்தாள் கசிவு! மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி வலியுறுத்தல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


