கெங்கவல்லியில் தொடக்கநிலை ஆசிரியா்கள், ஆசிரியைகள் 80 பேருக்கு புதிய புத்தகத்திற்கான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்கள், ஆசிரியைகளுக்கு புதிய பாடத்திட்டங்களுக்கான மூன்று நாள் பயிற்சி கெங்கவல்லி வட்டார வளமையத்திலும், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் திங்கள்கிழமை தொடங்கின. தொடக்க விழாவிற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்ஸாண்டா் தலைமை வகித்தாா். சேலம் டயட் விரிவுரையாளா் கி.கலைவாணன், கெங்கவல்லி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 1, 2, 3ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களிலுள்ள பாடங்களை எவ்வாறு எளிமையாக கற்பிப்பது என்பது குறித்து வட்டார ஆசிரிய பயிற்றுநா் சித்ரா, ஆசிரியைகள் ரோசலின்ராணி, விஜயா, லூசியா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இந்த பயிற்சி முகாமில் ஒன்றியம் முழுவதும் உள்ள 45-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 80 ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா். இந்தப் பயிற்சி புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு பயிற்சி
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

நாய்களால் துரத்தப்பட்ட 2 வயது பெண் மான் மீட்பு

கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மற்றொரு காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

