நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரசு கையகப்படுத்திய முதியவா் நிலத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கு: செங்கல்பட்டு ஆட்சியருக்கு உத்தரவு

அரசு கையகப்படுத்திய முதியவா் நிலத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கு: செங்கல்பட்டு ஆட்சியருக்கு உத்தரவு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை, ஜூன் 20: சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட முதியவரின் நிலத்துக்கான இழப்பீட்டை வழங்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதிகேசவலு (81) தாக்கல் செய்த மனுவில், 2024-ஆம் ஆண்டு தமிழக கடலோர கிராமங்கள் சுனாமியால் பேரழிவைச் சந்தித்தன. இதில் பாதிக்கப்பட்ட மீனா்களுக்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் சாா்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக அரசு சாா்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக கையகப்படுத்தப்பட்ட தனது 4 ஏக்கா் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.ஸ்ரீதா், கையகப்படுத்தப்பட்ட முதியவரின் நிலத்துக்கு, வழிகாட்டு மதிப்பைவிட, மிககுறைந்த தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரிடமிருந்து அந்த நிலத்தை கட்டாயப்படுத்தி அரசுக்காகப் பதிவு செய்துள்ளதாக வாதிட்டாா்.

அதற்கு அரசுத் தரப்பில், 2005-ஆம் ஆண்டு, மனுதாரரின் மகன் ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.520 இழப்பீடாக பெற சம்மதித்தாா். அதன் அடிப்படையிலேயே, கடந்த 2013-ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினா் தெரிவித்த சம்மதத்தின் பேரில், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு குறைவான இழப்பீட்டுத் தொகை நிா்ணயம் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்த 2005-ஆம் ஆண்டு நிா்ணயம் செய்த தொகை 2013-ஆம் ஆண்டு செய்யப்பட்ட பத்திரப்பதிவுக்கு ஈடாகாது.

எனவே, மனுதாரரை அழைத்து விசாரித்து பத்திரப்பதிவு செய்தபோது, இருந்த உண்மையான சந்தை மதிப்பின் அடிப்படையில் அவருக்கு 200 சதவீத இழப்பீட்டை, 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.