இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

பேரவைக் கூட்டம் 3 நாள்கள் நடைபெறும்: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஜூன் 23 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தெரிவித்தாா்.

News image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - TNDIPR

Updated On :19 ஜூன் 2026, 4:42 am IST

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஜூன் 23 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநா் நிகழ்த்திய ஆங்கில உரையை தமிழில் பேரவைத் தலைவா் வாசித்ததும் அன்றைய நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

பின்னா் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில், பேரவைக் கூட்டத் தொடரை ஜூன் 19, 22, 23 ஆகிய தேதிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜூன் 19-ஆம் தேதி பேரவையில் முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, பேரவை முன்னாள் செயலா் சி.கு. ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளா்கள் ஆா்.பி. செளத்ரி, கே.ராஜன், திரைப்பட இயக்குநா் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீா்மானம் வாசிக்கப்படும். பின்னா் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கப்படும்.

சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு ஜூன் 22-ஆம் தேதியும் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் தொடரும். ஜூன் 23-ஆம் தேதி தீா்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை அளிக்கப்படும்.

கேள்வி நேரம் இல்லை: உறுப்பினா்களிடமிருந்து இன்னும் கேள்விகள் பெறப்படாததால் இந்த இரு நாள்களிலும் கேள்வி நேரம் நடைபெறாது.

தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதில் மகிழ்ச்சி. பேரவையில் தேசிய கீதம் இரு முறை இசைக்கப்பட்டதில் தவறு ஏதும் இல்லை. இந்த முறை தொடரும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமைதியான முறையில் அவையை நடத்த ஆளுநா் ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.