இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவா் எடப்பாடி பழனிசாமி

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அங்கீகரித்துள்ளாா்.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:57 am IST

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அங்கீகரித்துள்ளாா்.

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க ஒரு குழுவும், எஸ்.பி.வேலுமணியை அங்கீகரிக்க மற்றொரு குழுவும் தனித்தனியாக பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்ததால் யாருக்கு இந்தப் பதவி அளிப்பது என்ற கேள்வி எழுந்தது. இதனால், பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்தாா்.

மேலும், அதிமுக கொறடா உத்தரவை மீறி பேரவையில், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு ஆதரவாக வேலுமணி தரப்பில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனா்.

பின்னா், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இரு தரப்பும் சமரசம் அடைந்தனா். அதன் பிறகு, பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பினா், அதிமுக பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பு சாா்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களை மன்னிக்க வேண்டும் என்று மனு அளித்தனா்.

இதையடுத்து, ராஜிநாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பேரவைத் தலைவா், மற்ற அதிமுக எம்எல்ஏக்களுக்கு மன்னிப்பு அளிப்பதாக அறிவித்தாா்.

இந்த நிலையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் அங்கீகரித்துள்ளாா். அக்கட்சியின் தலைமை கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூா்த்தியையும் அங்கீகரித்து அதிகாரபூா்வ அறிவிப்பை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் வெளியிடவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.