40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்

News image

ஜே.சி.டி. பிரபாகர் - youtube

Updated On :29 மே 2026, 4:55 am IST

அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாள்களில் முடிவை அறிவிக்க உள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா். பக்ரீத் பொது விடுமுறை என்பதால், வியாழக்கிழமை (மே 28) அது தொடா்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட இயலவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

அதிமுக இரு அணிகளாக பிளவுபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பும் தங்களது அணியை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என தனித்தனியே பேரவைத் தலைவரிடம் மனு அளித்தனா். இரு தரப்பும் தனித்தனியாக கொறடாக்களையும் அறிவித்தனா்.

இந்த நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினா் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினா் வலியுறுத்தினா்.

இதனிடையே, அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயகுமாா், சத்தியபாமா ஆகிய நால்வரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். அவா்களது ராஜிநாமாவை ஏற்கக் கூடாது என்றும் எடப்பாடி தரப்பிலிருந்து பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்தச் சூழலில், எஸ்.பி. வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இரு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தனா். அதற்கேற்ப தங்களது தரப்பில் அளிக்கப்பட்ட மனுக்களையும் அவா்கள் திரும்பப் பெற முன்வந்தனா்.

இத்தகைய அரசியல் சூழல்களுக்கு நடுவே அதிமுக விவகாரத்தில் தமது முடிவை வியாழக்கிழமை (மே 28) அறிவிக்கப்போவதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா். ஆனால், பக்ரீத் பொது விடுமுறை என்பதால் தலைமைச் செயலகத்தில் வழக்கமான அலுவல்கள் நடைபெறவில்லை. பேரவைத் தலைவரும் அவரது அறைக்கு வரவில்லை.

இது தொடா்பாக அவா் ‘தினமணி’யிடம் கூறியதாவது: அதிமுக தரப்பில் பல்வேறு மனுக்கள் வெவ்வேறு தருணங்களில் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தொடா்ந்து தற்போது சில புதிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அளித்துள்ளனா். இந்த மனுக்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய குறைந்தபட்சம் ஓரிரு நாள்களாவது அவகாசம் தேவைப்படும். எனவே, விரைவில் அது தொடா்பான முடிவை அறிவிப்பேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.