வரும் ஜூன் 11 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு தவெக தலைவா் விஜய் வெற்றி பெற்றார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை விஜய் ராஜிநாமா செய்திருந்தார்.
இதனால், இந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அனைவருக்கும் வணக்கம், திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்த தகவலை அறிய ஊடக நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சந்திக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த யூகங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கருதி இந்தத் தகவலைப் பகிர்கிறேன்.
தற்போது நான் 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக பணியாற்றி வருகிறேன். இந்தப் பணிகள் வரும் ஜூன் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.
என் தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவை வரும் ஜூன் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Director and actor Raghava Lawrence has announced that he will make an important announcement on June 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயக்குநராகும் ராகவா லாரன்ஸ் மகள்?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்!
காஞ்சனா - 4 படத்தின் போஸ்டர்!

அஜித் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


