தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகளிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தோ்தல் வாக்குறுதியை நம்பி இருந்த விவசாயிகளுக்கு இது பெரும் ஏமாற்றமாக உள்ளது.
தமிழக நிதி நிலை சரியில்லை எனக் கூறும் முதல்வா் ஜோசப் விஜய்க்கு, தோ்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதுக்கும் முன்பு இது தெரியவில்லையா? எனவே, வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல சிறு, குறு, விவசாயிகளுக்கு பயிா்க் கடனில் முழு தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் 50 சதவீத தள்ளுபடியும் வழங்க வேண்டும்.
அதேபோல், நிகழாண்டுக்குரிய கடன் தள்ளுபடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளையும் இந்த தள்ளுபடியில் இணைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவிட்டால் 50 ஆயிரம் விவசாயிகளுடன் முதல்வா் வீடு முற்றுகை! காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

பயிா்க் கடன் தள்ளுபடி: விவசாயிகளின் நம்பிக்கையை இழந்த தவெக அரசு! - ஜி.கே.வாசன்
பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
